Friday, March 4, 2022

அவுஸ்திரேலிய அணி பாகிஸ்தானில் விளையாடுகையில், ஷியா மசூதியில் குண்டுவெடிப்பு - 57 பேர் உயிரிழப்பு


பாகிஸ்தானின் பெஷாவர் நகரம், கிஸ்ஸா குவானி பஜார் பகுதியில் உள்ள ஜாமியா மசூதியில் இன்று (04) சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. 

மசூதியில் ஏராளமான மக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. 

இந்த சம்பவத்தில் முதற்கட்டமாக 30 பேர் உயிரிழந்ததாக கூறிய நிலையில், தற்போது 57 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 

மேலும் 200 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

இது ஒரு தற்கொலை தாக்குதல் என பெஷாவர் காவல்துறை அதிகாரி ஹரூன் ரஷீத் கான் தெரிவித்துள்ளார். 

இதேவேளை, பெஷாவர் குண்டுவெடிப்புக்கு பிரதமர் இம்ரான் கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment