Tuesday, April 12, 2022

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் பேச்சு நடத்த தயார் - பிரதமர் அறிவிப்பு


காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் தயாராக உள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

அவர்களை கலந்துரையாடலுக்கு அழைப்பதாக அத தெரணவிடம் அவர் தெரிவித்தார். 

கொழும்பு காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று 5 நாளாக தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. 

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு உடனடியாக தீர்வு கோரியும், ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

நாடளாவிய ரீதியில் இளைஞர்களின் பங்குபற்றுதலுடன் கடந்த 9ஆம் திகதி ஆரம்பமான இந்த போராட்டம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இரவு பகலாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையிலேயே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுடன் கலந்துரையான அரசாங்கம் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment