Tuesday, April 12, 2022

சட்டவிரோதமாக எரிபொருளை சேமித்து, விற்பனை செய்பவர்களை தேடி பொலிசார் வேட்டை (வீடியோ)


- பாறுக் ஷிஹான் -

எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக பெற்றோல் மற்றும் டீசல் கான்களுக்கு விநியோகிப்பது இன்று  முதல் மூன்று நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய  ஏப்ரல் 12,13, 14 ஆகிய திகதிகளில் கான்களில் எரிபொருள் அம்பாறை மாவட்டத்தில் உள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வழங்கப்படவில்லை.

இது தவிர சட்டவிரோதமாக எரிபொருளை சேமித்து, விற்பனை செய்பவர்களை தேடி சோதனை நடவடிக்கைகளும்  இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன.கல்முனை ,பொத்துவில், சவளக்கடை ,சம்மாந்துறை ,மத்தியமுகாம் ,பொலிஸ் நிலையங்களில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தன.

No comments:

Post a Comment