Friday, December 23, 2022

உலகின் அதிவேக கணிதப் போட்டியில் இலங்கைக்கு 18 பதக்கங்கள்


அபாகஸ் ஒலிம்பியாட் சர்வதேசப் போட்டியில் கலந்து கொண்ட 18 மாணவர்களும் இலங்கைக்காக 18 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.


இந்த அபாகஸ் ஒலிம்பியாட் போட்டி வயதுக் குழுக்களின்படி நடைபெறும் உலகின் அதிவேக கணிதப் போட்டியாகும். தாய்வானின் தாய்பே நகரில் டிசம்பர் 18 முதல் டிசம்பர் 20 வரை இந்தப் போட்டி நடைபெற்றது.


வெற்றி பெற்ற மாணவர்கள் குழு இன்று சிங்கப்பூரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment