Monday, June 19, 2023

பணணன வயறறலரநத 10 கல எடயளள கடட அகறறம


ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் பெண்ணொருவரின் வயிற்றில் இருந்து, சுமார் பத்து கிலோ எடையுள்ள கட்டி அகற்றப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் சுரங்க உபேசேகர தெரிவித்துள்ளார்.


ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையின் மகப்பேறு வைத்திய நிபுணர் வைத்தியர் சமந்த சமரவிக்ரம தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட சத்திரசிகிச்சையில் கருப்பை வாயில் இருந்து இந்த கட்டியை அகற்றியுள்ளனர்.


சுவாச பிரச்சினை காரணமாக கடந்த வியாழக்கிழமை சிகிச்சைக்காக வருகை தந்த 49 வயதுடைய பெண் ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் கட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இதனை தொடர்ந்து குறித்த பெண் உடனடியாக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு (19.06.2023) ஆம் திகதி சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இந்த சத்திரசிகிச்சையினை தொடர்ந்து நோயாளி நலமுடன் இருப்பதாக விசேட வைத்தியர் சமந்த சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment