Tuesday, June 20, 2023

பரபகரனன பரத பரசதன அறககய வழஙக மறபப


புலிகளின் தலைவரின் பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்க பாதுகாப்பு அமைச்சு மறுப்பு தெரிவித்துள்ளது.


புலிகளின் தலைவரின் பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்குவது தேசியப்பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனவும் தெரிவித்துள்ளது.


2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விடுதலைப்புலிகளின் தலைவரின் பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்குமாறு விண்ணப்பமொன்று முன்வைக்கப்பட்டிருந்தது.


குறித்த விண்ணப்பத்தினை ஊடகவியலாளர் மிதுன் ஜயவர்தன பாதுகாப்பு அமைச்சு, இராணுவ தலைமையகத்திற்கு அனுப்பிவைத்திருந்தார்.


இதற்கமைய, விடுதலைப்புலிகளின் தலைவரின் பிரேத பரிசோதனை அறிக்கையை “தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், இந்த தகவல்களை வழங்கினால் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும்” என்று இலங்கை இராணுவமும், இலங்கைப் பாதுகாப்பு அமைச்சும் நிராகரித்துள்ளது.


இலங்கை தகவலறியும் ஆணைக்குழுவுக்கு இது தொடர்பில் மேன்முறையீடு செய்துள்ளதாகவும் ஊடகவியலாளர் மிதுன் தெரிவித்துள்ளார்.   

No comments:

Post a Comment