ஈரானுடன் எரிபொருள் கொடுக்கல் வாங்கல்கள் தொடரும் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. ஈரான் மீதான பொருளாதாரத் தடை காரணமாக எரிபொருள் கொள்வனவு தொடர்பான 250 மில்லியன் டொலர் நிலுவைப் பணம் செலுத்தப்படவில்லை என வர்த்தக விவகார அமைச்சர் ரிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.
விரைவில் ஈரானுக்கு செலுத்த வேண்டிய நிலுவைப் பணம் செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானுக்கு எதிரான தடைகளினால் பல நாடுகள் கொடுக்கல் வாங்கல் செய்ய முடியாது சிக்கல்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரித்துள்ளார். அணுத் திட்ட விவகாரம் காரணமாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் ஈரானுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதித்துள்ளன.
இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையில் மிகவும் ஆழமான உறவுகள் நீடித்து வருவதாகத் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஈரானிய முதலீட்டாளர்களுக்கு அமைச்சர் பதியூதீன் அழைப்பு விடுத்துள்ளார். gtn
No comments:
Post a Comment