(vi) பண பலத்தை பிழையான வழியில் செலவழிக்கும் மற்றும் சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களுக்கு விருப்பு வாக்குகளை வழங்க வேண்டாம் என பொதுமக்களை கேட்டுக் கொள்வதோடு அவ்வாறானவர்களுக்கு ஆசிர்வாதம் வழங்க வேண்டாமென மகாநாயக்க தேரர்களிடமும் பணிவான வேண்டுகோள் விடுப்பதாக தெரிவிக்கும் தர்மபால அமைப்பு,இவ்வாறனவர்களுக்கு தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பத்தை அரசியல் கட்சிகள் வழங்கக்கூடாது என்றும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தர்மபால பரம்பரை அமைப்பின் தலைவர் கலாநிதி மெதகம தம்மானந்த தேரர் மேலும் தெரிவித் திருப்பதாவது,
யுத்தத்தின் பின்னர் பல்வேறு விடயங்களில் வெற்றிகளை நாம் கண்டுள்ளோம்.
ஆனால், வரலாற்றில் ஒரு போதும் இல்லாதவாறு சமூக மற்றும் கலாசாரச் சீரழிவு அதிகரித்துள்ளது.
இதனால் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுவோர் பலர் அரசியலுக்குள் புகுந்து உயர் நிலையை அடைந்துள்ளனர்.
பண பலத்தை பயன்படுத்தி சமூகத்தின் மத்தியில் தமது வியாபார நோக்குடனான ஆதிக்கத்தை புகுத்தியுள்ளனர்.
எனவே கொள்கைக்காக அதனை முன்னெடுப்பதற்காக அரசியலுக்கு வருவோர் பாதிக்கப்படுகின்றனர்.
கொள்கை ரீதியான வேட்பாளருக்கு தேர்தலில் வாக்களிப்பதை கைவிட்டு பண பலமுடையோருக்கு வாக்களிக்கும் நிலை உருவாகியுள்ளது. வரலாற்று பெருமையுடைய அரசியல் கட்சிகளும் இந்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. எனவே, தேர்தலில் இவ்வாறானவர்கள் போட்டியிட்டால் அவர்களுக்கு மக்கள் வாக்களிக்கக்கூடாது. அது மட்டுமல்லாது இவ்வாறா னவர்களுக்கு மகா ச
No comments:
Post a Comment