ஜெர்மனியின் எஸ்ஸென் பகுதியைச் சேர்ந்த 63 வயது பெண்மணி ஏஞ்சலா மேயர். இவர் வாங்கி லாட்டரி சீட்டுக்கு 3 லட்சத்த்து 30 ஆயிரம் பவுண்டு (இந்திய மதிப்பில் சுமார் 3 1/2 கோடி) பரிசு விழுந்தது. ஆனால் குடிபோதையில் அந்த பணத்தை துண்டு துண்டாக கிழித்து கழிப்பறையில் போட்டு விட்டார்.
இதுகுறித்து வழக்கு விசாரணை நடந்து வந்தது. இதில், ஏஞசலாவின் கணவர் சில மாதங்களுக்கு முன் எஸ்ஸென் அருகிலுள்ள ஒரு பாராமரிப்பு இல்லத்தில் நோய் வாய்பட்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி திடீரென இறந்து விட்டார்.
பரிசு விழுந்த சில நாட்களுக்குப் பிறகு தகவலறிந்த பராமரிப்பு இல்லத்தை சேர்ந்தவர்கள் கணவரின் சிகிச்சைக்காக அவர் தர வேண்டிய மருத்துவ கட்டண தொகையை பெற ரசீதை ஏஞ்சலாவிற்கு தபாலில் அனுப்பினர்.
குடிபோதையில் இருந்த ஏஞ்சலா, தபாலை பிரித்து பார்த்தபோது அதில் கட்டண ரசீது இருப்பதை பார்த்தவுடன் கோபமடைந்தார். அதிர்ஷ்டமாக கிடைத்த பரிசு பணத்தின் ஒரு பகுதியை மருத்துவ கட்டத்திற்காக செலுத்துவதைவிட கிழித்து விடலாம் என நினைத்து துண்டு துண்டாக அந்த பணத்தை கிழித்து கழிப்பறையில் போட்டு விட்டார்.
கட்டணத்தை செலுத்தாமல் இருப்பதற்காக ஏஞ்சலா நாடகமாடியிருக்கிறார் என விசாரணையில் தெரியவந்தது. இருந்தாலும், ஏஞ்சலா இந்த வழக்கை முடிக்க 3 ஆயிரத்து 300 பவுண்டுகள் இழப்பீடாக கொடுப்பதாக ஒப்புக்கொண்டார்.
No comments:
Post a Comment