பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் அருகேயுள்ள நங்கிஸ் பகுதியில் வசித்து வரும் ஒருவர் ஏராளமான கத்திக் குத்து காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாக கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் போலீசாருக்கு அவசர அழைப்பு வந்தது.
இதனையடுத்து, விரைந்து சென்ற போலீசார் சம்பவ இடத்தை சென்றடைவதற்குள் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அந்த 42 வயது மதிக்கத்தக்க நபர் பரிதாபமாக இறந்துப் போனார். அந்த வீட்டில் அவருடன் தனியாக வசித்து வந்த மனைவியை போலீசார் துருவித்துருவி விசாரித்ததில், கணவனுக்கும், தனக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆவேசமடைந்த அந்தப் பெண், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சுமார் 80 முறை அவரை மாறி, மாறி குத்திக் கொன்றது தெரிய வந்தது.
ஆனால், என்ன காரணத்துக்காக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது? என்பது தொடர்பாக ஏதும் கூற அந்த 35 வயது பெண் மறுத்துவிட்டார். இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், கொலைக்கான காரணம் என்ன? என்ற உண்மையை தெரிந்துக் கொள்வதற்காக அந்த பெண்ணை இன்று உளவியல் நிபுனரிடம் அழைத்து சென்று பரிசோதிக்க முடிவு செய்துள்ளனர்.
இந்த பரிசோதனைக்கு பின்னர் கொலைக்கான பின்னணி பற்றி தெரிந்துவிடும் என போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment