(Nf) பிரித்தானியாவில் எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் கொள்ளையிட முயன்றவர்களை துணிவுடன், போராடி விரட்டியுள்ளார் இலங்கைப் பெண் ஒருவர்.
ரசிகா யக்கன்வால என்ற 27 வயது இலங்கைப் பெண், குறித்த நிறுவனத்தில் கடந்த பல வருடங்களாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் சம்பவம் இடம்பெற்ற தினம், முகத்தை மறைத்தவாறு இரு கொள்ளையர்கள் நிறுவனத்திற்கு உள்ளே வருவதும், அதனை தடுக்க போராடும் ரசிகாவினதும் காட்சிகள் அங்குள்ள CCTV கமராவில் பதிவாகியுள்ளது.
குறித்த கொள்ளையர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு, இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment