சிங்கள மக்களுடன் இணைந்துதான் பாடுபடவேண்டும். தமிழர்கள் மட்டும் தனியாக பாடுபட முடியாது என தெரிவித்துள்ள கல்முனை விகாராதிபதி, நாங்கள் தமிழ் பேசுவது உங்களுக்காக என்று குறிப்பிட்டுள்ளார்.
கல்முனை மாநகரசபை முதல்வரினால் கொண்டுவரப்பட்ட 400 வருடங்களுக்கும் பழமைவாய்ந்த தரவப்பிள்ளையார் வீதியின் பெயரினை மாற்றுவது தொடர்பான தீர்மானமானது தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றது.
அதில் ஒரு கட்டமாக நேற்று கல்முனை ஸ்ரீ முருகன் தேவஸ்தானத்தின் கட்டடத்தில் தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினர் ஏகாம்பரம் தலைமையில் சிவில் அமைப்பு, த.தே.கூட்டமைப்பின் மாநகரசபை உறுப்பினர்கள், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன், கிராமப்பெரியார்கள், கல்முனை விகாராதிபதி, ஆலயங்களின் உறுப்பினர்கள், கிராம அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள் என பலரும் கழந்து கொண்டனர்.
இங்கு உரையாற்றியவர்கள் அம்பாறை மாவட்டத்தில் அதிலும் குறிப்பாக கல்முனையில் வாழும் தமிழர்களை திட்டமிட்டமுறையில் அழித்தொழிக்க வேண்டும் என்பதில் முஸ்லிம் அரசியல்வாதிகள் குறியாக இருந்து வருகின்றார்கள். இதற்கு நாம் அனைவரும் கட்சிபேதங்களை மறந்து செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். Tw
No comments:
Post a Comment