இலங்கையை ஒரு ரத்தம் தோய்ந்த நாடாக சித்தரிக்க இடமளிக்கப் வேண்டாம் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.
பம்பலபிட்டி - இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாம் பிறந்த நாடு நாம் வெற்றிக் கொண்ட நாடாகும். வடக்கை போல தெற்கிலும் சிறுவர்கள் யுத்த சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டது.எனினும் தற்போது அந்த நிலைமை நீக்கப்பட்டுள்ளது.
30 வருடங்களாக மக்கள் சந்தித்த இன்னல்களை மறந்து, ஐரோப்பிய நாடுகள இன்று மனித உரிமைகள் குறித்து மாத்திரம் பேசுவது வருத்தமளிக்கின்ற விடயம்.
தேசிய ரீதியில் ஒருவரை ஒருவர் சந்தேக கண் கொண்டு பார்த்து வந்த சூழ்நிலை தற்போது மாற்றப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி இதன் போது தெரிவித்தார்.
No comments:
Post a Comment