மக்களை கூட்டுப்படுகொலைச் செய்ய சிரியாவில் பஷருல் அஸதை அனுமதித்ததன் மூலம் உலகம் தோல்வியை தழுவியது என்று துருக்கியின் வெளியுறவுத்துறை அமைச்சர் அஹ்மத் தாவூத் ஓக்லு தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து அவர் கூறியது,
அனைத்து நாடுகளுக்கு அபாயத்தை விளைவிக்கும் வகையில் சிரியாவில் உள்நாட்டுப் போர் தொடருகிறது.ராணுவம் நவீன ஆயுதங்களை தாக்குதலுக்கு பயன்படுத்துகிறது.சர்வதேச அளவில் இயங்கும் ஆயுதக் குழுக்கள் சிரியாவிற்கு கூட்டமாக வருவது, பயங்கரமான சூழலை உருவாக்கியுள்ளது.
சர்வதேச அளவில் சரியான உளவுத்துறை ஒத்துழைப்பு, வெளிநாட்டுப் போராளிகளை சிரியாவில் இருந்து வெளியேற்ற தூண்டுதல் உள்ளிட்ட காரியங்களின் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவேண்டும்.இவ்வாறு தாவூத் ஓக்லு தெரிவித்துள்ளார். Thoo
No comments:
Post a Comment