சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் பிர்ளியண்ட் பாலர் பாடசாலை அங்குரார்பணம் செய்து வைக்கும் நிகழ்வு சாய்ந்தமருது – 14 அஹமட் வீதியில் அமைந்துள்ள பாலர் பாடசாலை வளாகத்தில் இன்று நடைபெற்றது.
பாலர் பாடசாலை பொறுப்பாசிரியை ஏ.எல்.எப்.ஷர்மிலா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இப்பாடசாலையை நாடாவெட்டி திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலக முன்பள்ளி பாடசாலைகளின் இணைப்பு உத்தியோகத்தர் ஆயிஷா செய்லாப்தீன், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.றஷீட், உள வள உத்தியோகத்தர் எம்.ஹப்ரத், காணி பிரிவு உத்தியோகத்தர் எம்.அனஸ் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்னடர்.
இதன்போது இப்பாலர் பாடசாலையில் இணைந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு இலவச கற்றல் உபகரணங்கள் கலந்து கொண்ட அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன.
No comments:
Post a Comment