Monday, February 24, 2014

தமிழக அரசுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கெடு!



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பொதுக்குழு நேற்று கூடியது. இதில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டு அதிகரிப்பை ஒரு வாரத்திற்குள் அதிமுக அரசு அறிவிக்க வேண்டும் என்று கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தேர்தல் நிலைபாடு குறித்த பொதுக்குழு தீர்மானம்:



முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டினை அதிமுக அரசு உயர்த்தி தந்தால் அதிமுகவுக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆதரவு வழங்குவது என்றும். உயர்த்தி தரவில்லையென்றால் அதிமுகவுக்கு எதிராக தேர்தலில் முழு மூச்சுடன் வேலைபார்ப்பது எனவும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.



மேலும், இட ஒதுக்கீடு தொடர்பாக அதிமுக அரசு ஒரு வார காலத்திற்குள் இடஒதுக்கீட்டினை உயர்த்தி வழங்கவில்லையெனில் அதிமுகவுக்கு எதிராக எப்படி வேலை செய்வது என்பதனை குறித்தும், தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆதரவு யாருக்கு என்பதனை இறுதியாக அறிவிக்கவும், அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் அவசர மாநில செயற்க்குழு சென்னையில் கூடும் என்றும் நேற்று கூடிய ததஜ பொதுகுழுவில் அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment