பாகிஸ்தான் தெஹ்ரிக் இ தலிபான் இயக்கத்தின் மூத்த தலைவரும், தளபதியுமான அஸ்மத்துல்லா ஷஹீன் பிட்டானி என்பவர் இன்று 24-02-2014 அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
வசிரிஸ்தானின் குலாம் கான் வட்டாரத்தை சேர்ந்த தர்கா மண்டி பகுதி வழியாக அவர் சென்ற வாகனத்தை வழி மறித்த சிலர் அஸ்மத்துல்லா ஷஹீன் பிட்டானியை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கிகளால் சுட்டனர். உடல் முழுவதும் குண்டுகளால் துளைக்கப்பட்ட அவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்.
வாகனத்தில் சென்ற மேலும் 3 பேர் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தையடுத்து, அந்த பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. பழிக்குப் பழியாக தலிபான்கள் வன்முறை தாக்குதல்களை கட்டவிழ்த்து விடுவார்களோ... என்ற அச்சத்தில் அங்கு வசிக்கும் பழங்குடியின மக்கள் பீதியடைந்துள்ளனர்.
தெஹ்ரிக்-இ-தலிபான் தலைவர் ஹக்கீமுல்லா மசூத் சமீபத்தில் கொல்லப்பட்ட பிறகு அந்த இயக்கத்தின் தற்காலிக தலைவகவும் தளபதியாகவும் அஸ்மத்துல்லா ஷஹீன் பிட்டானி செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment