அமரபுர நிக்காயவைச் சேர்ந்த பௌத்த பிக்குகள் அரசியலில் ஈடுபடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அமரபுர நிக்காயவைச் சேர்ந்த பௌத்த பிக்குகள் அனுமதியின்றி அரசியலில் அல்லது தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது.
நேற்று 24-02-2014 பலப்பிட்டியில் நடைபெற்ற சங்க சம்மேளனக் கூட்டத்தில் இது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அரசியல் நடவடிக்கைகள் பொலிஸாருடன் மோதிக் கொள்ளல், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுதல் போன்றன தடை செய்யப்பட்டுள்ளன.
ஏனைய நிக்காயக்களைச் சேர்ந்த பெளத்த பிக்குகளுக்கு இந்த தடை உத்தரவு பொருந்தாது எனத் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment