Monday, May 5, 2014

தேர்தலுக்கு தயாராகுங்கள் - ஜனாதிபதி மஹிந்த உத்தரவு



ஊவா மாகாண சபை தேர்தலுக்கான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மாகாண சபை அமைச்சர்கள் மற்றும் மாகாண சபை பிரதிநிதிகளுக்கு அறிவித்துள்ளார்.



நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.



இந்த சந்திப்பில் ஊவா மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.



குறித்த கலந்துரையாடலை அடுத்து ஜனாதிபதியினால் அறிவுறுத்தல் கோவையொன்று வழங்கிவைக்கப்பட்டதாக ஊவா மாகாண அமைச்சர் ஒருவர் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.


No comments:

Post a Comment