Wednesday, July 2, 2014

அளுத்கம விகாராதிபதியை தாக்கிய நபர்கள் பிணையில் விடுதலை



அளுத்கமை தர்கா நகர் பத்திராஜ கொட பெளத்த விஹாரையின் அதிபதி மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மூன்று சந்தேக நபர்களும் பிணையில் செல்ல (2-07-2014) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



களுத்துறை பிரதம நீதவான் அஜித் மாரசிங்க முன்னிலையில் சந்தேக நபர்கள் ஆஜர் செய்யப்பட்ட போது தலா 50,000 ரூபா வீதம் 150,000 ரூபா பிணையில் செல்ல அனுமதி யளித்தார். தர்கா நகரைச் சேர்ந்த மூவரே இவ்வாறு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.



தர்கா நகர் பத்திராஜகொட பெளத்த விஹாரையின் விஹாராதிபதி மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்தை மையமாக வைத்தே இப்பகுதியில் கடந்த ஜுன் மாதம் 15ம் திகதி வன்செயல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. ஜுன் 12ம் திகதி முதல் சந்தேக நபர்கள் மூவரும் விளக்க மறியலில் வைக்கப் பட்டிருந்தனர்.




No comments:

Post a Comment