Monday, March 23, 2020

இது போன்ற சோதனையும், வேதனையும் யாருக்கும் விடக்கூடாது


இந்த புகைப்படம் பல கதைகள் சொல்லுகின்றது. அது மட்டும் அல்லாது இதயத்தை கலங்க வைக்கும் ஒரு புகைப்படமும் கூட.

அந்த முக வாயிலுக்கு வெளியே நிற்பவர் டாக்டர் ஹதியோ அலி. சமீபத்தில் ஜகார்த்தாவில் கொரோனா வைரஸுக்கு எதிராக மாதக் கணக்கில் போராடி சிகிச்சையளித்து வந்த நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மரணமடைந்த ஒரு மருத்துவர். இது அவர் வீடு வந்த கடைசி தருணம்.

அவர் வாசலில் நின்று தனது குழந்தைகளையும் கர்ப்பிணி மனைவியையும் பார்த்து கண்ணீர் சிந்தி கதறி அழுதார். அந்த குழந்தைகள் அப்பா பூரண குணமடைந்து நம்முடன் கொஞ்ச வந்திருக்கின்றார் என நினைத்திருக்கலாம்.

கொரானா நோய் தன் குடும்பத்தாரை தாக்காமலிருக்க தன் குடும்பத்தாரை சந்திப்பதை தவிர்த்துள்ளார். அவர் அந்நியரைப் போல வாயிலுக்கு வெளியே வெறும் பார்வையாளராக, உதவியற்றவராக நின்று திரும்பிச் சென்ற கடைசி தருணம்.

அந்த மருத்துவருக்கு வந்த சோதனையும் வேதனையும் வேறு எந்த நபருக்கும் வந்து விடக்கூடாது என எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம். இவர் இன்று இந்தோனேசியாவின் ஒரு ஹீரோ.

Yahiya Olumuddeen

No comments:

Post a Comment