Tuesday, April 19, 2022

ஜனாதிபதி, பஷில் ஆகியோரின் மனைவிகளுக்கு எதிராக அமெரிக்காவில் முறைப்பாடு


முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்‌ஷவின் மனைவி  மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் மனைவி ஆகியோர், இலங்கை  மக்களின் நிதியைப் பயன்படுத்தி அமெரிக்காவில் சொத்துகளை சேகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அமெரிக்காவின் FBI (Federal Bureau of Investigation) நிறுவனத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அவர்களால் அவ்வாறு சேகரிக்கப்பட்ட சொத்துகளை நியாயப்படுத்த அவர்களுக்கு நிரந்தர வருமானம் கிடைப்பதில்லை என்றும் எனவே, இந்த விடயம் தொடர்பில் பக்கசார்பற்ற விசாரணைகளை முன்னெடுத்து, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துமாறு தெரிவித்து, FBI நிறுவனத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment